×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திறந்த லாரியில் சடலங்களுடன் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளிகள்! வெளியான பகீர் சம்பவம்!

Migrant workers travel with deadbody in lorry

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள்,  கூலி தொழிலாளர்கள் என பலரும் வேலையிழந்து பசியால் பெருமளவில் தவிர்த்து வந்தனர். அதனை தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடிவு செய்து,  பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பீகார் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். ஊரடங்கால் அவர்கள் லாரியில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். அப்பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் ஆரேயா என்ற பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு திறந்த லாரி ஒன்றில் ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே லாரியில் விபத்தில் காயமடைந்தவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்,  ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், வெளிமாநில தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சடலங்களை லாரியில் அனுப்புவதை தவிர்த்து உத்தரப்பிரதேச அரசு முறையான ஏற்பாடு செய்து அதனை ஜார்கண்டிற்கு அனுப்பியிருக்கலாம். சடலங்கள் ஜார்கண்ட் எல்லைக்கு வந்த பின் அதற்கு உரிய மரியாதையளித்து சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.இதனையடுத்து லாரியில் இருந்த சடலங்கள், உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lorry #dead body #Migrant worker
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story