×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயணத்திற்கு மட்டுமல்ல உங்கள் திருமண போட்டோ சூட்களுக்கும் எங்களது சேவை தொடரும்..! மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி..!

பயணத்திற்கு மட்டுமல்ல உங்கள் திருமண போட்டோ சூட்களுக்கும் எங்களது சேவை தொடரும்..! மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி..!

Advertisement

கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

திருமண நிகழ்வுகளில் போட்டோ ஷூட்  என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலை லாபகரமானதாக மாற்றும் நோக்கில் திருமண போட்டோஷூட் நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களின் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திருமண போட்டோஷூட்களுக்கு குறைவான கட்டணத்தில் அனுமதி அளிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் ஒரு மெட்ரோ ரயில் பெட்டிக்கு அதிகபட்சமாக 2 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்யலாம் எனவும், நிற்கும் ரயிலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஓடும் ரயிலுக்கு 8 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

மேலும், 3 மெட்ரோ ரெயில் பெட்டிகள் தேவையானால் நிற்கும் ரெயிலில் 2 மணி நேரத்திற்கு ரூ.12 ஆயிரமும், ஓடும் ரெயிலுக்கு ரூ.17.5 ஆயிரமும் செலுத்த வேண்டும். வைப்புத் தொகையாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவை ரயில் ஆலுவாவில் இருந்து பெட்டா வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#metro train #photo shoot #Wedding Photo Shoot #KERALA #Aluva - Bettiah
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story