பஞ்சாப் வங்கியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.. வெளியான அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
Masked robbers looted at punjab bank

பஞ்சாப் மாநிலம் ஹொஷைர்பூர் மாவட்டத்தில் உள்ள கில்ஷியான் என்ற கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியினுள் நேற்று காலை 10:30 மணியளவில் முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர் திடீரென உள்ளே புகுந்தனர்.
கையில் துப்பாக்கியுடன் வந்த அவர்கள் வங்கி ஊழியர்களை மிரட்டி 11 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் பை நிறைய பணத்துடன் ஒரே பைக்கில் மூன்று பேரும் தப்பி சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அவர்கள் பைக்கில் செல்லும் காட்சிகளும் சிசிடிவியல் பதிவாகியுள்ளது.
அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ள அம்மாநில போலீசார் அவர்களை பற்றி தகவல் கிடைத்தால் தெரியபடுத்தவும் என விளம்பரம் செய்துள்ளனர்.