தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்சார் ! 3 வயது சிறுமிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்! துடிதுடிக்கும் பெற்றோர்கள்...

பைக்கை பிடித்து இழுத்த போலீஸ்சார் ! 3 வயது சிறுமிக்கு நடந்த பதறவைக்கும் சம்பவம்! துடிதுடிக்கும் பெற்றோர்கள்...

mandya-toddler-dies-due-to-police-negligence-during-emergency Advertisement

கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு சோகமிகுந்த சம்பவம், மாநிலமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் அலட்சியமும், ஒழுங்கின்மையும் ஒரு மூன்றே வயதான குழந்தையின் உயிரை பலியாக்கியது.

மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் வாணி தம்பதிக்கு ஹிருதிக்‌ஷா என்ற மூன்று வயது மகள் உள்ளார். நேற்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்‌ஷாவை அங்கு திரிந்த நாய் கடித்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஹிருதிக்‌ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அசோக்கும் வாணியும் அவசரமாக பைக்கில் புறப்பட்டனர்.

மருத்துவமனைக்குள் செல்ல முடியாத அவலம்

அவர்கள் மண்டியா நகருக்குள் வந்தபோது, போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்றதால், அசோக்கின் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது குழந்தைக்கு ஏற்பட்ட அவசர நிலையை தெரிவித்தும், கெஞ்சியும் போலீசாரால் அனுமதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: Video : ஐயோ..உள்ளே போ..நொடியில் வீட்டு கூரையை இடித்து தள்ளிய யானை! வைரலாகும் வீடியோ...

அசோக் தொடர்ந்தும் செல்ல முயன்ற நிலையில், போலீசார் ஆவேசமாக பைக்கை இழுத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய பைக் சாலையில் புரண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் ஹிருதிக்‌ஷா தலையில் பயங்கர காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மக்கள் போராட்டம், போலீசாருக்கு சஸ்பென்ஷன்

உயிரிழந்த தனது மகளை மடியில் வைத்தபடி, அசோக்கும் வாணியும் சாலையோரத்தில் கண்ணீருடன் அமர்ந்து போலீசாரின் அலட்சியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதை கண்ட மக்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதும், மண்டியா மாவட்ட எஸ்பி மல்லிகார்ஜுன பாலதண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

 

 

இதையும் படிங்க: பெற்றோர்கள் கவனத்திற்கு...ஜெல்லி சாப்பிட்ட 1½ வயது குழந்தை.. அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mandya accident #Karnataka police negligence # #Child death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story