வறுமையில் வாழ்ந்த முதியவர்! ஆனால் வீடு முழுக்கப் பண மூட்டைகள்.... எங்களுக்கு ஒரு ரூபா கூட வேணாம்! மசூதி வாசலில் பிச்சை எடுத்த முதியவர் இருக்கும் போது கோடீஸ்வரர்! கர்நாடகாவை அதிர வைத்த மர்மம்..!!!
கர்நாடகாவின் மாண்டியாவில் மசூதி அருகே பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் மறைவுக்குப் பின், அவரது குடிசையில் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் இருந்தது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மசூதி அருகே பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் மறைவுக்குப் பிறகு, அவரது குடிசையில் இருந்த பணத்தைப் பார்த்து மசூதி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். வாழ்நாள் முழுவதும் வறுமையில் இருந்த அவர், கிடைத்த சொற்ப வருமானத்தைச் சேமித்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டைச் சுத்தம் செய்யச் சென்றபோதுதான் இந்த எதிர்பாராத தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
குடிசைக்குள் குவிந்திருந்த பணம்
முதியவர் இறந்த பிறகு அவரது வீட்டைச் சுத்தம் செய்ய மசூதி நிர்வாகிகள் சென்றுள்ளனர். அப்போது மூட்டைகள் மற்றும் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணத்தை முழுமையாக எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிமையில் வாழ்ந்த முதியவர்
கணவன், குழந்தைகள் என குடும்ப ஆதரவு எதுவும் இல்லாமல் அந்த முதியவர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மசூதி அருகே பிச்சை எடுத்து கிடைத்த பணத்தை செலவு செய்யாமல் சிறுகச் சிறுக சேமித்துள்ளார். வெளியில் பார்த்தவர்களுக்கு எளிய வாழ்க்கை வாழ்ந்தவராக தெரிந்த அவர், மறைவுக்குப் பிறகு இவ்வளவு பெரிய தொகையைச் சேர்த்து வைத்திருந்தது அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மசூதிக்கே பணத்தை வழங்க சகோதரர்கள் முடிவு
இதுகுறித்து முதியவரின் சகோதரர்களிடம் மசூதி நிர்வாகிகள் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, இந்தப் பணம் தங்களுக்கு வேண்டாம் என்றும், முதியவர் வாழ்ந்த மசூதிக்கே அதை தானமாக வழங்கிவிடுமாறும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்நாள் முழுவதும் வறுமையோடு போராடிய ஒருவரின் குடிசைக்குள் இவ்வளவு பெரிய தொகை இருந்தது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது. தற்போது முதியவர் சேமித்த பணம் முழுமையாக கணக்கிடப்பட்ட பிறகே அதன் உண்மையான மதிப்பு தெரியவரும் என கூறப்படுகிறது.