"விவாகரத்து கேட்ட மனைவி..." நடு ரோட்டில் பிளேடால் வெட்டிய கணவன்.!! நீதிமன்றம் அருகே பரபரப்பு.!!
விவாகரத்து கேட்ட மனைவி... நடு ரோட்டில் பிளேடால் வெட்டிய கணவன்.!! நீதிமன்றம் அருகே பரபரப்பு.!!
உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றம் வந்த பெண் பிளேடால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீபக் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீபக் மற்றும் ரஞ்சனாயிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி ஜான்சி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் ரஞ்சனா.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் விசாரணைக்காக ரஞ்சனா மற்றும் தீபக் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து செல்லும் போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ரஞ்சனாவை, மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் தீபக். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரஞ்சனா வலியால் அலறி துடித்தார்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரஞ்சனாவை தீபக்கின் தாக்குதலிலிருந்து காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தீப்க்கை கைது செய்தனர். காயமடைந்த ரஞ்சனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட தீபக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "தலைக்கேறிய போதையில் தாய் மீது பாய்ந்த மகன்..." அடித்தே கொன்ற தந்தை.!!