ஓனர் மனைவியுடன் உல்லாசம்... திட்டம் போட்டு கதையை முடித்த முதலாளி.!! 2 பேர் கைது.!!
ஓனர் மனைவியுடன் உல்லாசம்... திட்டம் போட்டு கதையை முடித்த முதலாளி.!! 2 பேர் கைது.!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலாளியின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் குனால். இவர் அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தார். விவேக் என்பவர் அந்த நிறுவனத்தின் முதலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் குணாலுக்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளரான விவேக்கின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விவேக் பலமுறை கண்டித்திருக்கிறார். எனினும் குணால், விவேக்கின் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.
இதனைத் தொடர்ந்து தனது நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான வாசிம் என்பவர் மூலம் குனாலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார் விவேக். அவர்களது திட்டத்தின் படி குணாளை தனியாக அழைத்துச் சென்ற வாசிம் கொடூரமாக படுகொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் பற்றி தகவலறிந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பினர்.
இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் விவேக் திட்டம் போட்டு வாசிம் மூலம் குனாலை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "காதல் பண்ண விட மாட்டியா..." கணவன் குத்தி படுகொலை.!! மனைவி கள்ளக்காதலன் கைது.!!