வங்கி கணக்கிற்கு வந்த மர்ம பணம்! ஜாலியாக செலவு செய்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
Man spent 86 thousand from bank account
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிந்த் மாவட்டம் ரோணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹகும் சிங் என்பவர் அலம்பூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் கணக்கு தொடங்கிய சில மாதங்களில் இருந்து அவரது வாங்கி கணக்கிற்கு மாதம் மாதம் மர்மமான முறையில் பணம் வந்துள்ளது.
வந்த பணத்தில் இருந்து சுமார் 86 ஆயிரம் வரை ஹகும் சிங் ஜாலியாக எடுத்து செலவு செய்துவந்துள்ளார். இதனிடையே தனது வங்கி கணக்கில் தான் போட்ட பணத்தை காணவில்லை என ஹகும் சிங் என பெயர் கொண்ட மற்றொருவர் வங்கியில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 6 மாதமாக போட்ட சேமிப்பு பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக்க வேண்டும். ஆனால் ரூ.35,400தான் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வங்கி கணக்கு தொடங்கிய பிறகு தான் அரியாணாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், 6 மாதமாக தனது வங்கி கணக்கை சோதிக்கவில்லை, தற்போது தனது கணக்கை சோதித்ததில் தான் சேமித்த பணத்தை காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஒரே பெயர் உள்ள இருவருக்கும் வங்கி மேலாளர் ஒரே வங்கி எண்ணை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து ஹகும் சிங்கை வரவைத்து அதிகாரிகள் விசாரித்ததில் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் போடுவேன் என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்களித்திருந்தார்.
அதனால், மோடிதான் தனது வங்கி கணக்கில் மாத மாதம் பணம் போடுவதாக நினைத்து நான் பணத்தை எடுத்து செலவு செய்தேன் என கூறியுள்ளார். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஹகும் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் செலவு செய்த பணத்தை மீட்டு மற்றொரு ஹகும் சிங்கிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.