ஒரே ஒரு நாள் தான்... திருமணம் முடிந்ததும் முதல் இரவில் மனைவி சொன்ன அந்த வார்த்தை! மொத்தமா முடுஞ்சுட்டு.... விவாகரத்துக்கு ரூ 10 லட்சம் கேட்டு.... கணவனின் அதிர்ச்சி பின்னணி...!!!
திருமணமான முதல் இரவே மனைவி நிராகரித்ததாக கூறிய நபர், இரண்டு ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கில் ரூ.10 லட்சம் செலவானதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
திருமணமான முதல் இரவே மனைவி தன்னை நிராகரித்ததாகவும், அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்ததாகவும் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் நீடித்த விவாகரத்து வழக்கு முடிவில், வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுடன் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இரவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு
திருமணத்துக்குப் பிறகு மனைவி, “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை” என்று கூறி விலகியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழாமல் தனித்தனியாக வசிக்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருமண வாழ்க்கையைத் தொடர முடியாத நிலையில், முறைப்படி விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மேக்கப் போடுவது.. மனரீதியான பாதிப்பா.?! அடக்கொடுமையே.. வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்.!
இழப்பீடாக ரூ.10 லட்சம் கேட்டதாக தகவல்
விவாகரத்து நடவடிக்கையின்போது மனைவி தரப்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு கோரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மனைவியும் நல்ல வேலையில் இருந்து வருமானம் ஈட்டி வந்ததாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வழக்கு நீண்ட காலம் நீதிமன்றத்தில் தொடர்ந்தால் வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் செலவுகள் ஏற்படும் என நண்பர்களும் சட்ட வல்லுநர்களும் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நீதிமன்றத்துக்கு சென்று அலைவதைவிட, கேட்கப்பட்ட தொகையை வழங்கி பரஸ்பர சம்மதத்துடன் வழக்கை முடித்துக்கொள்வது நடைமுறையில் சுலபமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து
நீண்ட கால சட்டப் போராட்டத்தால் ஏற்பட்ட மன உளைச்சலையும் கூடுதல் செலவுகளையும் தவிர்க்க, வேறு வழியின்றி ரூ.10 லட்சம் வழங்கி பரஸ்பர சம்மத விவாகரத்து பெற ஒப்புக்கொண்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார். குறுகிய காலமே நீடித்த திருமண வாழ்க்கைக்காக இவ்வளவு பெரிய தொகையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் பகிர்ந்துள்ள பதிவு, திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: திருமணமாகி 6 மாதம் தான்... மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவர் கண்ட ஷாக்…! இத எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு... பகீர் சம்பவம்!!!