உறவுக்கார பெண்ணுடன் கள்ளக்காதல்... குளத்தில் மிதந்த ட்ராக்டர் டிரைவரின் உடல்.!! கணவன் கைது.!!
உறவுக்கார பெண்ணுடன் கள்ளக்காதல்... குளத்தில் மிதந்த ட்ராக்டர் டிரைவரின் உடல்.!! கணவன் கைது.!!
ஆந்திர மாநிலத்திலுள்ள டிராக்டர் ஓட்டுனரான ராமஞ்சினுலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.
இதன் காரணமாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரில் கொண்டையா என்பவர் மீது சந்தேகமிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. கொண்டையா, ராமஞ்சினுலுவை கொலை செய்ததாக தானே வாக்குமூலமளித்தார்.
இந்த கொலை சம்பவம் நடந்த அன்று கொண்டையா, ராமஞ்சினுலுவை ஊருக்கு வெளியே அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருக்கும் குளத்தில் உடலை வீசி சென்றதாக தெரியவந்தது. மேலும் கொண்டையாவின் மனைவியுடன் ராமஞ்சினுலு கள்ள தொடர்பு வைத்திருந்ததால் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா.? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... துணி துவைத்ததில் தகராறு.!! மனநலம் பாதித்த நபர் கொலை.!! இளைஞர்கள் வெறி செயல்.!!
இதையும் படிங்க: "வினையான சந்தேகம்.." கர்ப்பிணி மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை.!! கணவன் கொடூர செயல்.!!