கொலையில் முடிந்த லவ் டார்ச்சர்... திருமணமான பெண் பலி.!! வாலிபர் கைது.!!
கொலையில் முடிந்த லவ் டார்ச்சர்... திருமணமான பெண் பலி.!! வாலிபர் கைது.!!
பெங்களூருவில் காதலிக்க மறுத்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ரவி என்ற திருமணமான நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு தலை காதல் பெங்களூரு நகரை சேர்ந்தவர் ஸ்வேதா. 32 வயதான இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். திருமணமான ஸ்வேதா கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்வேதாவிற்கு தனது அலுவலகத்தில் பணிபுரியும் ரவி என்ற நபருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஒரே அலுவலகத்தில் பணி செய்வதால் ஸ்வேதா, ரவி என்ற நபருடன் நட்பாக பழகி இருக்கிறார். ஆனால் ரவி, ஸ்வேதாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளும்படி ஸ்வேதாவை அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலிக்க மறுத்ததால் கொலை ஏற்கனவே திருமணமான ரவி தனது மனைவியை பிரிந்து வருவதாகவும் ஸ்வேதாவிடம் கூறியிருக்கிறார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவியை புறக்கணித்திருக்கிறார் ஸ்வேதா. இதனால் ஆத்திரமடைந்த ரவி நேற்று ஸ்வேதாவை கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஸ்வேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: "எனக்கு அவங்க தான் முக்கியம்.." தோழிகளுக்காக மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.!!
கொலையாளி கைது இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை நடத்திய விசாரணையில் காதலிக்க மறுத்ததால் ஸ்வேதா கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்வேதாவிற்கு தொல்லை கொடுத்து வந்த ரவியை கைது செய்து விசாரித்ததில் ஸ்வேதாவை கொலை செய்ததை ரவி ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அவன்கிட்ட எத கண்ட..." காதலிக்க மறுத்த பெண்.!! சுட்டு கொன்ற காதலன்.!!