வயிற்று வலியால் துடிதுடித்த நபர்.! ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம் கலந்த பேரதிர்ச்சி!!
man eating spoon and knife

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி நகரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சமீபத்தில் 35வயது நிறைந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றினுள்ளே ஸ்பூன், ஸ்க்ரூட்ரைவர், கத்தி போன்றவை இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த பொருட்கள் வயிற்றின் உள்ளேயே இருந்தால் மிகவும் ஆபத்து என்பதை உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது உடல் நலத்துடன் உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நிகில் கூறுகையில், வயிற்று வலியால் வந்த நபரின் வயிற்றுக்குள் 8ஸ்பூன்கள், 2 ஸ்க்ரூட்ரைவர், 2டூத் பிரஸ்,கத்தி போன்றவை இருந்தது. இதனை கண்டதும் நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் எங்களது குழு விரைந்து செயல்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்த அனைத்தையும் அகற்றி விட்டோம். மேலும் அந்த நபர் மனநோயாளி என்பதால் செய்வதறியாது அனைத்தையும் விழுங்கியுள்ளார் என கூறியுள்ளனர்.