×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஊரடங்கு உத்தரவால் 200 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி.! வரும் வழியிலையே நேர்ந்த சோகம்.!

Man dies after walking 200 kms to Agra from delhi

Advertisement

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு. சொந்த ஊருக்கு போக போக்குவரத்துக்கு வசதி இல்லை. எப்படியும் சொந்த ஊருக்கு சென்றே ஆகவேண்டும் என்ற வெறியில், 200 கிலோமிட்டர் நடந்து சென்ற தொழிலாளர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் அச்சிற்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை அடுத்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முயற்சி செய்துவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பேருந்து வசதி இல்லாததால், டெல்லியில் இருந்து ஆக்ரா நோக்கி சுமார் 200 கிலோமிட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார் 39 வயதான புலம்பெயர் தொழிலாளர் ரன்வீர் சிங்.

டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஹோம் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். சொந்த ஊருக்கு செல்வதற்காக டெல்லி  தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் நடந்து வந்த போது கைலாஷ் மோத் அருகே ரன்வீர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். ரன்வீர் கீழே விழுவதை பார்த்த அந்த பகுதி கடைக்காரர் ஒருவர் ரன்வீரை மீட்டு அவருக்கு டீ மற்றும் பிஸ்கெட் கொடுத்துள்ளார்.

கடைக்காரரிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக ரன்வீர் கூறியுள்ளார். மேலும், தனது உறவினர்களுக்கு போன் செய்து உடல்நிலை பற்றியும் கூறியுள்ளார் ரன்வீர். இதனை அடுத்து மாலை 6.30 மணியளவில் ரன்வீர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொண்டதால் இதயம் பலவீனமாகி மாரடைப்பு வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ரன்வீருக்கு 2 பெண் குழந்தைகள் உட்பட 3 பிள்ளைகள்உள்ளனர். ஏழை விவசா குடும்பத்தை சேர்ந்த நாங்கள் குழந்தைகளை எப்படி கரை சேர்ப்பது என்று தெரியவில்லை என ரன்வீரின் சகோதரர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #Corono dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story