×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டி, அதே பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபம்..! வைரல் வீடியோ..

பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற நபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அத

Advertisement

பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற நபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று ரக்ஷப்பந்தன் நாள் சிறப்பாக கொண்டப்பட்டது. பெண்கள் அனைவரும் தாங்கள் சகோதரர்களாக கருதும் நபர்களுக்கு ராக்கி கட்டி அந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் ரக்சா பந்தன் தினத்தன்று, பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற போது அதே பாம்பு கடித்து உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த Manmohan என்ற அந்த பாம்பாட்டி, ரக்சா பந்தன் தினத்தன்று தன்னிடம் இருந்த இரண்டு  பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றார். அப்போது கீழே ஊர்ந்துகொண்டிருந்த பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பாம்பாட்டியின் காலில் கடித்தது.

இருப்பினும் அந்த பாம்புகளை தனது கையில் தூக்கிக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருந்த அந்த பாம்பாட்டி சிறிது நேரத்தில் மயங்கி விழவே, அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  அந்த பாம்பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பாம்பாட்டியை பாம்பு கடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story