ஸ்கூட்டர் வாங்க மூட்டை மூட்டையாக பணம் கொடுத்த நபர்! வாங்கி பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
Man buy scooter paying 83000 in coins
மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் குமார் குப்தா என்பவர் ஸ்கூட்டர் ஓன்று வாங்க ஆசைப்பட்டு அருகிலுள்ள ஹோண்டா ஷோரூமுக்கு சென்றுள்ளார். பலவிதமான ஸ்கூட்டர்களை பார்த்துவிட்டு ஆக்டிவா ஸ்கூட்டரை தேர்வுசெய்துள்ளார் ராகேஷ்.
எல்லாம் பேசி முடித்துவிட்டு அந்த ஸ்கூட்டருக்கான விலையான ரூபாய் 83 ஆயிரத்தை செலுத்துமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பணம் செலுத்துவதற்காக கவுண்டருக்கு சென்ற ராகேஷ் மூட்டை மூட்டையாக பணத்தை வழங்கியுள்ளார். ராகேஷின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சியான கடை ஊழியர்கள் அவர் கொடுத்த பணத்தை வாங்கி பார்த்ததில் அனைத்தும் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக இருந்துள்ளது.
இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காத கடை ஊழியர்கள் ராகேஷ் கொடுத்த பணத்தை சுமார் மூன்று மணி நேரம் எண்ணி முடித்து ஸ்கூட்டருக்கான சாவியை அவரிடம் கொடுத்துள்னனர். சில்லறையாக கொடுத்து ராகேஷ் ஸ்கூட்டர் வாங்க என்ன காரணம், விளம்பரத்திற்காக இப்படி செய்தாரா என எதுவும் தெரியவில்லை.