தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ காலில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்.. 39 வயது நபருக்கு நடந்த சோகம்.. ரூ. 6.5 இலட்சம் பறிப்பு.!

வீடியோ காலில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்.. 39 வயது நபருக்கு நடந்த சோகம்.. ரூ. 6.5 இலட்சம் பறிப்பு.!

Maharashtra Thane Man Cheating by Cyber Crime Thief Nude Video Call Advertisement

 

சைபர் குற்றவாளிகளின் மோசடி செயல்கள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனை குறைக்க நாம் கட்டாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 39 நபர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி இவருக்கு வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்த நிலையில், பெண் ஒருவர் அதில் அரைகுறை ஆடையுடன் தோற்றமளித்துள்ளார். 

தனது ஆடைகளை கழற்றி அவர் ஆபாசமாக காட்சி அளித்த நிலையில், அதிர்ந்து போன ஆலோசகர் வீடியோ அழைப்பை துண்டித்திருக்கிறார். பின் சிறிது நேரத்தில் அவருக்கு அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில், சம்பந்தப்பட்ட நபர் பெண்ணுடன் பேசுவது போல ஸ்க்ரீன்ஷாட் இருந்துள்ளது. 

அதனை கண்டுகொள்ளாத நிலையில், மறுநாள் போன் செய்த ஒருவர் தன்னை டெல்லி காவல்துறை அதிகாரி என அறிமுகம் செய்து சம்பந்தப்பட்ட பெண்மணி விபச்சார தொழில் செய்து வருவதால், நாங்கள் அவரை தேடி வருகிறோம். விசாரித்த போது உங்களின் வீடியோ இருக்கிறது. அது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதனால் பதறிப் போனவர் காவலர் கொடுத்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் ரூபாய் 50000 பணம் கேட்டுள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என அவரும் ரூபாய் 50 ஆயிரம் பணம் அனுப்பி வைத்த நிலையில், அவரிடம் மிரட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூபாய் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பறிக்கப்பட்டுள்ளது. 

ஒரு சமயத்தில் மோசடி நபர்களால் வாழ்க்கை மீது வெறுப்படைந்தவர், அங்குள்ள காசர் வடவளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 15 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #India #Pune #Nude Video Call
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story