×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாருமே இல்ல.... வசியம் வைத்து இளம்பெண்ணை கடத்தினார்களா? அந்த பொண்ணு வெளியே வந்து செய்யுறது பாருங்க! மர்மமாக மாயமாவதற்கு முன் சிக்கிய சிசிடிவி காட்சி!!!

மகாராஷ்டிராவில் 18 வயது இளம்பெண் மர்மமாக மாயம். சிசிடிவி காட்சிகள் பல சந்தேகங்களை கிளப்ப, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தில் 18 வயது இளம்பெண் மர்மமாக மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பாத நிலையில், சிசிடிவி காட்சிகள் புதிய கேள்விகளை எழுப்புகின்றன. போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவியில் பதிந்த விசித்திர காட்சி

சகஜீவன் நகரைச் சேர்ந்த சஞ்சீவனி ராகுல் வராடே (18), சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வீட்டை விட்டு வெளியே வரும் சஞ்சீவனி முன்பாக ஒரு முதியவர் செல்வது தெரிகிறது. அதன்பின் அவர் நடக்கத் தொடங்குகிறார்.

இதையும் படிங்க: ஐயோ... பார்க்கவே பயமா இருக்கே! மாயமந்திரங்கள் செய்யும் இடம்! பறவை போல மாறி பேசிய சூனியக்காரி! பீதியில் மக்கள்...! மர்ம வீடியோ!

ஆனால், அவர் ஒரு கையை உயர்த்தியபடி நடப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. யாரோ ஒருவர் கையைப் பிடித்து இழுக்கும் போல் தோன்றினாலும், வீடியோவில் அருகில் வேறு யாரும் காணப்படவில்லை.

வசியம் மூலம் கடத்தலா? மக்கள் சந்தேகம்

சஞ்சீவனி நடந்த விதம், அவர் சுயநினைவின்றி இருந்தாரோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சிலர் இது ஒரு வகையான வசியம் (Hypnotism) மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர். கட்டளைக்குள் நடப்பது போல அவரது அசைவுகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

இந்த நிலையில், அவர் உண்மையில் யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்டாரா அல்லது தனியாக சென்றாரா என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். நண்பர்கள், சுற்றுப்புற மக்கள் ஆகியோரிடமும் தகவல் சேகரிப்பு நடக்கிறது. சஞ்சீவனியைப் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு குடும்பத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Maharashtra missing girl #சிசிடிவி மர்மம் #Teen Girl Missing #police investigation #hypnotism suspicion
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story