தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

11 வயது சிறுமி பள்ளி கழிவறையில் பாலியல் பலாத்காரம்.. 36 வயது காமக்கொடூரன் கைது.. நாடே அதிர்ச்சி.!

11 வயது சிறுமி பள்ளி கழிவறையில் பாலியல் பலாத்காரம்.. 36 வயது காமக்கொடூரன் கைது.. நாடே அதிர்ச்சி.!

Maharashtra Pune Shivajinagar Private School 11 Aged Minor Girl Raped in Toilet Accuse Arrested Advertisement

பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், 36 வயது காமுகன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, சிவாஜி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 11 வயதுடைய சிறுமி 6 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சிறுமி வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக தெரியவருகிறது. அப்போது, மர்ம நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்றுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கழிவறையில் இருந்து வந்து தனது தோழிகளிடம் தகவலை தெரிவிக்க, அவர்கள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர் சிறுமியின் பெற்றோருக்கும், சிவாஜிநகர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

maharashtra

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்த மர்ம நபரை நிகழ்விடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமாக அடையாளம் கண்டு தேடி வந்தனர். நேற்று நள்ளிரவு நேரத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 36 வயது காமுகனை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #Pune #Shivajinagar #Minor Girl #Rape #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story