கர்ப்பிணி வனக்காவலரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர்.. அதிர்ச்சி வீடியோ.!
கர்ப்பிணி வனக்காவலரை மனைவியுடன் சேர்ந்து தாக்கிய முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர்.. அதிர்ச்சி வீடியோ.!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே, சத்தாரா மாவட்டம், பல்ஸாவாடே கிராம வனத்தில் வனக்காவலராக பணியாற்றி வரும் பெண் அதிகாரி, ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது ஒப்புதலின்றி தொழிலாளர்களை அழைத்து சென்றதாக உள்ளூர் வன நிர்வாக குழு தலைவர் ராமச்சந்திர ஜான்கரூர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இராமச்சந்திர ஜான்கரூர் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி இருந்த நிலையில், பெண் வனக்காவலரின் செயலால் ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று பெண் வனக்காவலருடன் தகராறில் ஈடுபட்ட நிலையில், தனது மனைவியுடன் சேர்ந்து கொண்ட ஜான்கரூர், பெண் வனக்காவலரை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இந்த தாக்குதலின் போது பெண் வனக்காவலர் 3 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த நிலையில், இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காவல் துறையினரின் பார்வைக்கு சென்றது. இதனையடுத்து, விசாரணையை முன்னெடுத்த காவல் துறையினர், ராமச்சந்திர ஜான்கருர் மற்றும் அவரின் மனைவியை கைது செய்தனர்.
மேலும், வனக்காவலரின் வயிற்றில் உள்ள கருவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.