×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு நீ வேணும்! இல்லைன்னா உன் புருஷன் கிட்ட சொல்லிடுவேன்... அந்த ஒரே வார்த்தையை சொல்லி சொல்லி டார்ச்சல்! செல்போன் மெசேஜால் வெளிவந்த இன்ஸ்பெக்டரின் லீலைகள்..!!!

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் பெண் ஆசிரியையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரேடு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அதிகாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் பெண் ஆசிரியையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கிரேடு சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

4 ஆண்டுகால பழக்கம்; மிரட்டலாக மாறிய உறவு

போலீசார் தெரிவித்த தகவலின்படி, துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஹரிஷ் மாதவ்ராவ் கட்டாவ்கர் (53) மற்றும் தனியார் பள்ளி ஆசிரியைக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக அறிமுகம் இருந்துள்ளது. அந்த அறிமுகத்தை பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த மே 2025 முதல் ஜூலை 15, 2026 வரை பலமுறை ஆசிரியையை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஹோட்டல் வேலை மற்றும் வீட்டின் இன்டீரியர் பணிகளை காட்டுவதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து அத்துமீறியதுடன், மறுத்தால் கணவரிடம் கூறி அவமானப்படுத்துவேன் என்றும் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!

கணவர் கண்டுபிடித்த குறுஞ்செய்திகள்

இதையடுத்து, ஆசிரியையின் மொபைலுக்கு தொடர்ந்து வந்த சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளை அவரது கணவர் கவனித்துள்ளார். பின்னர் கட்டாவ்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்தபோது, தனது மனைவியை காதலிப்பதாக அவர் நேரடியாகக் கூறியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த புதன்கிழமை மாலை ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற கட்டாவ்கர், சையத் நிசார் என்பவரின் காரில் அவரை அழைத்துச் சென்று காருக்குள்ளேயே தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு 10 மணியளவில் ஆசிரியையின் மொபைலை பறித்துக்கொண்டு நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவான போலீஸ் அதிகாரி

1993ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த ஹரிஷ் கட்டாவ்கர் மீது இதற்கு முன்பும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ஜவஹர்நகர் போலீசார் புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், முழுமையான அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அதிகாரியை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: பெட்ரூமில் பிருந்தா தேவியுடன் கணவனை அந்தக்கோலத்தில் பார்த்த மனைவி! தலைக்கேறிய வெறியால் நடந்த தகராறு.... தோட்டத்தில் புதைக்கப்பட்ட பிணம்.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Maharashtra News #சத்ரபதி சம்பாஜிநகர் #Police SI #பாலியல் வன்கொடுமை #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story