இறுதிச்சடங்குக்கு வராத இளம்பெண்ணை குத்திக்கொன்ற பயங்கரம்.! உறவினர் வெறிச்செயல்.!
இறுதிச்சடங்குக்கு வராத விரக்தியில் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை; உறவினர் வெறிச்செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் மாவட்டத்தில் 25 வயதுடைய இளம்பெண் தனது தாயாரோடு வசித்து வருகிறார். அதேபகுதியில் வசித்து வந்த கிருஷ்ண பவார் என்பவரின் சகோதரர் நேற்று உயிரிழந்து விட்ட நிலையில், இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண் மற்றும் அவர் தாயார் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா பவார், அவரின் மனைவி மற்றும் சகோதரன் என குடும்பமாக சேர்ந்து இளம்பெண்ணின் தாயாரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சியுற்ற பெண்மணி தனது தாயாரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது கிருஷ்ண பவார் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக இளம்பெண்ணை குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.