×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூட்டிய வீட்டிற்குள் 3 பெண்களின் அலறல் சுத்தம்.. ஓட்டுனரின் பயங்கரம்.. உப்பிட்ட தாய் - மகள்களுக்கு நேர்ந்த கொடுமை.!

பூட்டிய வீட்டிற்குள் 3 பெண்களின் அலறல் சுத்தம்.. ஓட்டுனரின் பயங்கரம்.. உப்பிட்ட தாய் - மகள்களுக்கு நேர்ந்த கொடுமை.!

Advertisement

10 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த வீட்டில் இருக்கும் 3 பெண்களை கொலை செய்த ஓட்டுநர் தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். கொலை - தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை காந்திவிலியை சார்ந்தவர் கிரண் தல்வி (வயது 46). இவரின் மகள்கள் முஸ்கான் தல்வி (வயது 26), பூமி தல்வி (வயது 17). இவர்களின் சொந்த ஊர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் ஆகும். மும்பையில் தங்கியுள்ள இவர்களிடம் சிவதயால் சென் என்ற 60 வயது நபர் 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் 

கிரணின் மாமியார் ராதாபாய்க்கு சொந்தமாக மருத்துவமனை உள்ளது. ராதாபாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இயற்கை எய்த, மருத்துவமனை மூடப்பட்டுவிட்டது. கிரண் தல்வி தனது மகள்களுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவில் 11 மணிக்கு கார் ஓட்டுநர் சிவதயால் கிரணின் வீட்டிற்கு சென்றிருந்தார். 

சிறிது நேரத்திற்குள்ளாகவே கிரண் வீட்டில் அலற, அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கிரண், அவரின் 2 மகள்கள் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளனர். ஓட்டுநர் வீட்டிற்குள் தற்கொலை செய்து இறந்து கிடந்தார். 

இவர்களின் உடலை மீட்ட அதிகாரிகள் 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #Kandivali #death #Murder #suicide #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story