×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு ஐடியா பாருங்க.... கொளுத்தும் வெயிலுக்கு ஏசி ஸ்கூட்டரை கண்டுபிடித்த இளைஞர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ....!!!

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மகாராஷ்டிர இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் உருவாக்கிய ‘தேசி ஜூகாட்’ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக தாக்கி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் செய்துள்ள வித்தியாசமான ஏற்பாடு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வெயிலில் பயணம் செய்வோருக்கு இந்த ஐடியா தற்போது பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

பல நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதால், மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லவே தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஸ்கூட்டரில் குளிர்ச்சி தரும் ஏற்பாடு

அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சிறிய அளவிலான தேசி ஜூகாட் அமைப்பை உருவாக்கியுள்ளார். ஒரு தண்ணீர் பாட்டில், சிறிய மோட்டார் பம்ப் மற்றும் பைப் நாசில்களை இணைத்து இந்த செட்டப்பை அவர் தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க: நடுரோட்டில் அமர்ந்து இப்படியா செய்வது! பரபரப்பான சாலையின் நடுவே முதியவர் செய்த செயலை பாருங்க.... வைரலாகும் வீடியோ!

ஸ்கூட்டர் ஓடும்போது, பைப் வழியாக மிக மெல்லிய நீர்த்துளிகள் வெளியேறும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது. காற்றுடன் கலந்து வரும் அந்த நீர்த்துளிகள் உடலில் படும்போது, ஏசி போன்ற குளிர்ச்சியை தருவதாக கூறப்படுகிறது.

சாலையோர மக்களின் கவனம்

சாலையில் சென்றவர்கள் பலரும் இந்த அமைப்பை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததையடுத்து, அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

தகவலின்படி, இந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பது அறிவியல் ரீதியாக Evaporative Cooling எனப்படும் தொழில்நுட்பம். சாதாரணமாக பெரிய குளிரூட்டும் கருவிகளில் பயன்படுத்தப்படும் இந்த முறையை, மிகவும் எளிமையாக ஸ்கூட்டரில் பொருத்தியிருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: இத பார்க்கவே சகிக்கல....இத எப்புடி சாப்புடுறது! அரைகுறை ஆடையுடன் சிப்ஸ் கிடங்கில் உருளும் இளைஞர்! அதிர்ச்சி வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Maharashtra Heat #ஸ்கூட்டர் ஜூகாட் #viral video #கோடை வெயில் #Evaporative Cooling
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story