இப்படி குனிந்து பார்க்கலாமா? லிப்ட்டில் சிக்கிய தலை! 30 நிமிடம் மரண போராட்டம்.. மருத்துவமனையில் பீதியை ஏற்படுத்திய விபத்து..!!!
மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் லிப்ட் விபத்தில் 50 வயது பெண் தொழிலாளி உயிரிழந்தார். CCTV காட்சி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான பெண் தொழிலாளி லிப்ட்டில் சிக்கி உயிரிழந்தார். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த அவர், பணியில் இருந்தபோதே இந்த விபத்து நடந்ததாக தகவல்.
லிப்ட் அருகே காத்திருந்தபோது விபத்து
ஜோதி சிவாஜி என்ற அந்த பெண், அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் சரக்கு லிப்ட்டுக்காக அவர் காத்திருந்தார். தகவலின்படி, லிப்ட் எங்கு இருக்கிறது என்பதை பார்க்க அவர் சற்றுக் குனிந்து பார்த்தபோது, மேலிருந்து வந்த லிப்ட் திடீரென அவரது தலையில் மோதி சிக்கிக் கொண்டது. இந்த எதிர்பாராத லிப்ட் விபத்து அங்கிருந்தவர்களை பதற வைத்தது.
30 நிமிடப் போராட்டத்திற்கு பின் மீட்பு
சம்பவத்தை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் இறங்கினர். சுமார் அரை மணி நேரம் போராடி அவரை லிப்ட்டிலிருந்து வெளியே எடுத்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார்! 3 வயது சிறுமி வாயில் போட்டு கடித்ததும் வெடித்து சிதறிய மிட்டாய்! உதடு தாடை கிழிந்து உயிருக்கு போராடும் சிறுமி !!!
தீவிர காயம் – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அவரது நரம்பு மற்றும் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டாலும் நிலைமை மோசமடைந்து, இறுதியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் முழுவதும் மருத்துவமனையின் CCTV காட்சியில் பதிவாகி, அதை பார்த்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மருத்துவமனையில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்.... நள்ளிரவு நேரத்தில் கழிவறையில் பதுங்கிருந்த எமன்! இறுதியில் நடந்த அதிஷ்டம்...! ஈரோடில் நடந்த திக் திக் சம்பவம்!!!