×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண் பத்திரிகையாளர் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில், தூக்கு உத்தரவை ஆயுளாக மாற்றிய நீதிமன்றம்..!

பெண் பத்திரிகையாளர் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில், தூக்கு உத்தரவை ஆயுளாக மாற்றிய நீதிமன்றம்..!

Advertisement

மஹாராஷ்ட்ராவை உலுக்கிய சக்தி மில் பெண் புகைப்பட பத்திரிகையாளர் கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் வருடம் மத்திய மும்பை பகுதியில் இருக்கும் சக்தி மில் வளாகத்தில் வைத்து, 22 வயது பெண் புகைப்பட பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டு, 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தூக்குத்தண்டனை தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் சாதனா ஜாதவ், பிரித்வி ராஜ் அமர்வில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில், குற்றவாளிகள் விஜய் ஜாதவ், முகமது ஷேக் மற்றும் முகமது அன்சாரி ஆகியோருக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டனர். 

கடந்த 2013 ஆம் வருடம் நடந்த இக்கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அன்றைய நாளில் விஜய் ஜனதாவுக்கு 19 வயது, காசிம் ஷேக்குக்கு 21 வயது, முகமது அன்சாரிக்கு 28 வயது நடந்தது. அப்போது இவ்வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "கற்பழிப்பு மனித உரிமை மீறல் என்ற உண்மையை புறக்கணிக்க இயலாது. மரண தண்டனையை இரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட பெண் உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.

தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், "மனம் திருத்துதல் என்ற கருத்து மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. அவர்களின் குற்றத்திற்காக மனம் வருந்தும் போது, அவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த குற்றத்திற்காக தகுதி உடையவர்கள். மரண தண்டனைக்கு தகுதி உடையவர் என்று கூற முடியாது. 

மேலும், குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வருந்தும் நிலையில், அவரது வருத்தத்தை மீறி தண்டித்தால் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் நீதி வருந்தும் தானே?" என்று கூறி மரண தண்டனையை இரத்து செய்துள்ளனர். பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் "மரண தண்டனை தவறாக வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முறையாக நடக்கவில்லை" என்று வாதாடினார்கள். 

மகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில் வாதிடுகையில், "மரண தண்டனை தடை உத்தரவு என்பதால், அது நியாயமானது" என்று தெரிவித்தது. குற்றவாளிகளில் 4 பேரில் 1 நபர் சிறார் என்பதால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakthi Mills #Mumbai #maharashtra #sexual abuse #Gang Rapped #police #Mumbai High Court #judgement
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story