×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகனுக்கு தூக்கு.. அதிரடி தீர்ப்பு..!

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகனுக்கு தூக்கு.. அதிரடி தீர்ப்பு..!

Advertisement

7 வயது சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக கூறி அழைத்து, பலாத்காரம் செய்து கொன்ற காமகொடூரனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், பிவாண்டி பகுதியில் வசித்து வருபவர் பாரத் குமார் தனிராம் கோரி. இவர் போர்ட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டருகே உணவகம் நடத்தி வரும் ஒருவருக்கு 7 வயதான ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், சிறுமி ஒருநாள் இரவு கரிவாலி கிராமத்தில் உள்ள சுபாஷ்நகர் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பாரத் குமார் ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அவரை கடத்தி சென்றுள்ளார்.

மேலும், சிறுமியை பலாத்காரம் செய்வதற்காக அவர் முயற்சித்த நிலையில், அதனை சிறுமி எதிர்த்து தப்பியோட முயன்றுள்ளார். ஆனால், அந்த காமக்கொடூரன் சிறுமியை விடாமல் துரத்தி சென்று, பலாத்காரம் செய்துள்ளான். மேலும், தான் பலாத்காரம் செய்ததை சிறுமி ஒருவேளை வேறு யாரிடமாவது கூறி விடுவாரோ என்று எண்ணி, அங்கிருந்த கல்லால் அவரைத் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து எதுவும் தெரியாததுபோல் சிறுமியின் சடலத்தை அங்குள்ள ஒரு புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த தனது மகளை காணாத தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அருகிலிருந்த பகுதியில், ஒரு புதரில் சிறுமியின் சடலமிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில், பாரத்குமார் தான் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும், இது குறித்து சிறுமி யாரிடம் கூற கூடாது என்பதற்காக கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்காக பாரத்குமாருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமிகளின் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதால், நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பெண்களின் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவது எந்த விதத்திலும் சரியானதாக இருக்காது. இதற்கான சரியான தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே குற்றம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #girl #Rape #death #punishment #Culprit
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story