ஐயோ.. பச்ச மண்ணைப்போயி... இரண்டே மாதத்தில், 400 பேரால் பலாத்காரம்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.!!
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோர் வீட்டிற்கு வந்து, தந்தையின் தொல்லையால் வீட்டை விட்டு வெளியேறி, 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோர் வீட்டிற்கு வந்து, தந்தையின் தொல்லையால் வீட்டை விட்டு வெளியேறி, 400 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமியை, பெற்றோர் கட்டாயப்படுத்தி வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவரின் நடவடிக்கையை பிடிக்காத சிறுமி, தாயாரின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனால் சிறுமியின் தந்தையும் மகளை துன்புறுத்தி இருக்கிறார்.
கடந்த மே மாதத்தின் போது தந்தையின் கொடுமையை தங்கத்தை சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட, அம்பேஜோகை பேருந்து நிலையம் அருகே தங்கியிருந்துள்ளார். இதன்போது, சிறுமியை பலரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னர், 15 பேரை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 8 பேர் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, விடுதியின் உரிமையாளர், காவல் அதிகாரி, ஊர்காவல்படை அதிகாரி போன்றோரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மொத்த கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
காவல் துறையினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், நெஞ்சை பதறவைக்கும் பல பரபரப்பு தகவலும் கிடைத்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட நபர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர்களில் 2 காவல் துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
தற்போது, சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ள காவல் துறையினர், சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த பிற காம கொடூரர்களையும் தேடி வருகின்றனர்.