×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் பொருத்தி மோசடி.. வெளிநாட்டு குற்றவாளியின் பகீர் செயல்.. உஷார்.!

ஏ.டி.எம்மில் ஸ்கிம்மர் பொருத்தி மோசடி.. வெளிநாட்டு குற்றவாளியின் பகீர் செயல்.. உஷார்.!

Advertisement

பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் பொருத்தி பணத்தை கொள்ளையடித்த 2 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அந்தேரி பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி மூலமாக பணத்தை கொள்ளையடித்து வந்த வெளிநாட்டை சார்ந்தவர், கடந்த 11 ஆம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் நடந்த விசாரணையில், அவரது கூட்டாளியான பல்கேரியா நாட்டினை சார்ந்த இமில் வால்கோவ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது உறுதியான நிலையில், அவரை காவல் துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். 

இவர்களின் வாக்குமூலப்படி, கோராகாவ் எஸ்.வி ரோடு, முள்ளுண்ட், நவ்கார் போன்ற இடத்திலும் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருப்பது உறுதியானது. 

கைதான மோசடி கும்பலிடம் இருந்து 8 ஆயிரத்து 500 யூரோ வெளிநாட்டு பணம், ரூ.14 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் மடிக்கணினி, டெபிட் கார்ட் போன்ற கருவிகள் கைப்பற்றப்பட்டன. 

ஸ்கிம்மர்:

ஏ.டி.எம் மையத்தில் நாம் கார்டுகளை உட்செலுத்தும் இடத்தில் பொருத்தப்படும் உளவு கருவியே ஸ்கிம்மர் என்று  கூறப்படுகிறது. இந்த கருவி நமது கார்டு விபரங்களை சேகரித்து சட்டவிரோத நபருக்கு கொடுக்கும். அதன் மூலமாக குற்றவாளி பணத்தை எடுத்துக்கொள்வான். 

இவ்வகை கருவி உள்ளதா? என்பதை சில நேரங்களில் எளிய முறையில் கண்டறிந்துவிடலாம். மேற்கூறிய புகைப்படத்தில் உள்ளவாறு, ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டு உட்செலுத்தப்படும் பச்சை நிற அமைப்பை லேசாக இழுத்து பார்த்தல் அது வந்துவிடும். வரவில்லை என்றால் பிரச்சனை இல்லை.

வராத கருவியை மேற்கொண்டு இழுத்து உடைந்துபோனால், நாம் திருட வந்துள்ளோம் என ஏ.டி.எம் இயந்திரம் தன்னிச்சையாக எச்சரிக்கை ஒலியை செயல்படுத்தும். கருவி இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க  வேண்டும்.

சிலவகை ஸ்கிம்மர் கருவிகளை காணும் போதே கார்டு உட்செலுத்தப்படும் இடம் வித்தியாசமாக தோற்றமளித்து காண்பித்துக்கொடுத்துவிடும். சுதாரிப்புடன் செயல்படுவது நல்லது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumbai #maharashtra #Andheri #ATM #ATM Skimmer #police #Forgery
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story