×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போனில் 350 ஆபாச வீடியோக்கள்! 1 இல்ல.. 2 இல்ல... 180 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் வீடு பாஜக எம்.எல்.ஏ முன் தரைமட்டம்!!!

மகாராஷ்டிரா அமராவதியில் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அயாஸ் வீடு இடிப்பு. போலீஸ் விசாரணை தீவிரம், மக்கள் வரவேற்பு அதிகரிப்பு.

Advertisement

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் சிறுமிகளை குறிவைத்து செயல்பட்ட பாலியல் குற்ற வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலரை சீரழித்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முகமது அயாஸ் வீடு இன்று அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ்அப், ஸ்னாப்சாட் மூலம் வலையில் வீழ்த்துதல்

தகவலின்படி, அயாஸ் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் சிறுமிகளிடம் நெருக்கம் வளர்த்துக் கொண்டு, பின்னர் அவர்களை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களை சீரழித்து, அந்த தருணங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளான். பின்னர் அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபட அழுத்தம் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாலியல் தொல்லை சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள்

மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே அளித்த புகாரின் பேரில் அயாஸ் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து நடந்த சோதனையில், அவனது செல்போனில் 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததும்,சுமார் 180 சிறுமிகளைப் பாலியல் தொல்லை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த அதிகாரிகளே அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவன் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 25 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்த பாஜக கவுன்சிலரின் மகன்! வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்! கோவாவில் அதிர்ச்சி!!!

சட்டவிரோத கட்டிடம் எனக் கூறி இடிப்பு

இதையடுத்து, அயாஸ் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள், பாஜக எம்.எல்.ஏ. பிரவீன் தயாடே முன்னிலையில் வீட்டின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த புல்டோசர் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பரவலான ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் முழுமையான விசாரணைக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று எம்.பி. அனில் போண்டே வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்! இன்னைக்கு நான் தான் சப்பாத்தி செய்றேன்.... காதலனின் பேச்சை கேட்டு பெற்றோருக்கு மகள் செய்த கொடூரம்! பகீர் கிளப்பும் ஆடியோ ஆதாரங்கள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Amravati case #அயாஸ் வீடு இடிப்பு #Maharashtra crime #child exploitation case #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story