கடுமையான துர்நாற்றம்! கதவு இடுக்கில் கசிந்த இரத்தம்..... வீட்டிற்குள் சென்று அந்த காட்சியை பார்த்ததும் உறைந்து நின்ற போலீஸ்...!!!
மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த மகன் மீண்டும் உயிர் பெறுவார் என்ற நம்பிக்கையில், அவரது உடலருகே பைபிளுடன் பிரார்த்தனை செய்த தாயின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த மகனின் உடலருகே, அவர் மீண்டும் உயிர் பெறுவார் என்ற நம்பிக்கையில் வயதான தாய் ஒருவர் பல நாட்களாக பிரார்த்தனை செய்து அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் பால் வழங்கி வந்த நபர் ஒருவர், அந்த வீட்டின் கதவு இடுக்கிலிருந்து இரத்தம் கசிவதையும் கடுமையான துர்நாற்றம் வீசுவதையும் கவனித்துள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஒரு அறையில் 42 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!
சடலத்தின் அருகே அமைதியாக அமர்ந்த தாய்
அறைக்குள் இருந்த காட்சி போலீசாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உயிரிழந்த தனது மகனின் அருகே வயதான தாய் ஒருவர் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். மேலும், மகனின் மார்பின் மீது ஒரு பைபிள் வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், அந்தப் பெண் ஓய்வு பெற்ற ஆசிரியை என்றும், நீண்ட நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மகன் உயிருடன் திரும்புவார் என்ற நம்பிக்கை
உயிரிழந்த நபர் மும்பையில் உள்ள பிரபல ஃபேஷன் டிசைனிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
ஆனால் மகனின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அந்தத் தாய், அவர் மீண்டும் உயிரோடு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார். இதனால், பல நாட்களாக மகனின் உடலருகே இருந்தும் வெளியில் எதுவும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
போலீசாரை தடுத்த தாய்
அக்கம் பக்கத்தினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், வயதான பெண் வழக்கம்போல் தனது அன்றாட வேலைகளை செய்து வந்ததால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என கூறப்படுகிறது.
பால் வழங்கும் நபர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை மீட்க முயன்றபோது அந்தத் தாய் அவர்களைத் தடுத்துள்ளார். தனது பிரார்த்தனையை காவல்துறையினர் கலைத்துவிடுவார்கள் என்று அவர் அச்சமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி, உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வெளிநாட்டில் இருக்கும் அவரது மற்ற மகன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வயதான தாய் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரருடன் குஜாலாக இருந்த மனைவி! கணவனும் மகனும் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்.... ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக மாறிய வாழ்க்கை...!!!