விளையாடும் போது நடந்த விபரீதம்! சிறுவனின் தொண்டையில் குத்தி வாய் வழியாக வந்த இரும்பு கம்பி....அதிர்ச்சி வீடியோ..!!!
மத்தியப் பிரதேசத்தில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பி 17 வயது சிறுவனின் தாடையை துளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கோண கம்பி, சிறுவனின் தாடையைத் துளைத்து வாயின் மறுபுறம் வெளியே வந்த நிலையில், துரிதமான மீட்பு நடவடிக்கையால் அவன் உயிர் பிழைத்துள்ளான். தற்போது மருத்துவ சிகிச்சைக்கு பிறகு நலமாக தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாடியபோது நேர்ந்த அதிர்ச்சி
தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை கர்கோனில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் அருகே சிறுவன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சுவரில் பொருத்தப்பட்டிருந்த கூர்மையான இரும்பு கம்பி அவனது தாடையை ஊடுருவி வாயின் மறுபக்கமாக வெளியே வந்துள்ளது.
சம்பவத்தை பார்த்தவர்கள் முதலில் பதற்றமடைந்தாலும், பின்னர் அமைதியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுவருடன் இணைந்திருந்த கம்பியை அப்படியே அகற்ற முடியாததால், கம்பி அறுக்கும் இயந்திரம் கொண்டு வந்து கவனமாக வெட்டி சிறுவனை விடுவித்தனர்.
உடனடி சிகிச்சை; இந்தூருக்கு மாற்றம்
தாடையில் கம்பி குத்திய நிலையிலேயே சிறுவன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல்சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
அங்குள்ள நிபுணர் மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து, தாடையைத் துளைத்திருந்த அவசர அறுவை சிகிச்சை மூலம் இரும்பு கம்பியை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது சிறுவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைரலாகும் வீடியோ
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், தாடையில் கம்பி குத்திய நிலையிலும் சிறுவன் அமைதியாக நின்று கொண்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பதற்றப்படாமல் செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய உள்ளூர் இளைஞர்களின் துரிதமான நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் போட்ட கும்மாளம்.....நொடியில் உயிரே போயிருக்கும்! அலறிய மக்கள் கூட்டம்! இறுதியில் இளையர்களின் துணிச்சல்....திக் திக் வீடியோ..!!!