×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசம், சொகுசு வாழ்க்கை.. ஸ்டேட் கடந்த கள்ளக்காதல் ஜோடியின் லீலை.. தமிழகத்தில் சிக்கியது எப்படி?

பல்வேறு மாநிலங்களில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

Advertisement

சொகுசு வாழ்க்கைக்காக ஆண் நண்பருடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஜோடியின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

நகைக்கடை உரிமையாளர்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள மாலங்கிரி பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ் பிரசாத் பாட்டீல். இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் நகைக்கடை இருப்பதால், இரவில் நகைகளை வீட்டின் லாக்கரில் கொண்டு சென்று வைத்துக்கொள்வதும் வழக்கம்.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

நட்பு:

இவரின் வீட்டுக்கு அருகே ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை சொந்தமாக கொண்ட மரசு ஜான்பால் (வயது 21), இந்தூரி அர்ச்சனா (வயது 39) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். தம்பதிகள் இருவரும் கணவன்-மனைவி என கூறிக்கொண்டு நிலையில், சுபாஷுடன் நட்பாக பழகி வந்துள்ளனர்.

லட்டில் மயக்க மருந்து: 

அவ்வப்போது சுபாஷின் வீட்டுக்கும் சென்று வந்த நிலையில், சம்பவத்தன்று லைட்டில் மயக்க மருந்து கலந்து சுபாஷுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். பின் சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடவே, வீட்டில் இருந்த தங்க லாக்கரை உடைத்து தங்க நகைகள், 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். 

கள்ளக்காதல் ஜோடி:

இந்த விஷயம் தொடர்பாக ஒடிசா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணையில் தம்பதிகள் என கூறிக்கொண்ட இருவரும் வேறு நபர்களுடன் திருமணம் முடிந்தவர்கள் என்பது உறுதியானது. அதாவது, கள்ளக்காதல் ஜோடியான இருவரும் தங்களை கணவன்-மனைவியாக ஏற்று வாழ்க்கை நடத்தி இருக்கிறது. 

ஒரே பாணியில் திருட்டு:

இந்த ஜோடி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று, பெண்கள் துணை இன்றி தனியே வாழும் பணக்காரர்களின் வீட்டை நோட்டமிட்டு இதே பாணியில் வாடகைக்கு வீட்டில் குடியேறி, இனிப்பில் மயக்க மருந்து கலந்து நகை, பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது. ஒடிசாவில் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய தம்பதி நாகர்கோயில் மாவட்டம் வடசேரிக்கு வந்து தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த ஒடிசா காவல்துறையினர் நேரடியாக வந்து இருவரையும் கைது செய்தனர். திருட்டு பணத்தை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளதால், அதனை மீட்க கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ரூ.2,500 பணத்துக்காக பெண் கொலை.. 50 அடி பள்ளத்தில் உடல் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #illegal affair #Crime Partner #உல்லாச வாழ்க்கை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story