தனது 6 வயது மகளை கொடூரமாக கொன்று வீட்டில் மறைத்த தாய்! அதிரவைக்கும் காரணம்! மனதை உலுக்கும் பகீர் சம்பவம்!
தனது 6 வயது மகளை கொடூரமாக கொன்று வீட்டில் மறைத்த தாய்! அதிரவைக்கும் காரணம்! மனதை உலுக்கும் பகீர் சம்பவம்!
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் நடந்த கொடூரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரில் நடனக் கலைஞராக பணியாற்றி வந்த ரோஷினி என்பவருக்கும், அவரது 6 வயது மகளான சோனிக்கும் இடையே நடந்த சம்பவம் மனதை உலுக்கும் வகையில் உள்ளது.
நான்கு ஆண்டுகளாக உதித் ஜெயஸ்வால் என்ற ஆணுடன் கள்ளக்காதலாக பழகிய ரோஷினி, தனது கணவர் ஷாருக்கை வீட்டை விட்டு வெளியேற்றினார். ஒரு நாளன்று, ரோஷினி தனது காதலனுடன் தனிமையில் இருந்தபோது, சோனி இந்த துரோகத்தை பார்த்து, தந்தையிடம் கூறுவதாக எச்சரித்தாள்.
இதை ஒட்டுமொத்தமாகத் தடுக்கும் முயற்சியில், கோபத்தில் மூழ்கிய ரோஷினி மற்றும் உதித், சிறுமி சோனியை கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், வாசனை திரவியம் பூசி, ஏசி அருகே உடலை மறைக்க முயற்சி செய்தனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளையர்கள்! இந்த பொருளை அடைய ஆசை! 19 வயது இளைஞரை கொடூரமாகக் கொன்ற சிறுவர்கள்! பகீர் சம்பவம்...
ஜூலை 15ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், ரோஷினி போலீசாரை தொடர்புகொண்டு, “என் கணவர் என் மகளை கொன்று ஓடியுள்ளார்” என பொய் புகார் அளித்தார். ஆனால் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, சடலத்தில் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் பூச்சிகள் உள்ளதால், கொலை பல மணி நேரத்திற்கு முன் நடந்ததென்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் உண்மை வெளிவந்ததும், ரோஷினியும் உதித்தும் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் லக்னோவில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மரணித்த குழந்தை.. உயிருடன் பிறந்த அதிசயம்.. GH மருத்துவர்கள் அலட்சியம்.!