ஒரேயொரு நொடி.. அடித்து தூக்கிய கார்.. பச்சிளம் குழந்தை துள்ளத்துடிக்க பலி.!
Accident News Today: அதிவேகத்தில் வந்த கார் 5 வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தால், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
விருந்துக்குச் சென்று வீடுதிரும்பிய மாணவர், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியத்தில் 6 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகினர்.
சிறுவன் மரணம்:Uttar
Lucknow Accident: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய 12ஆம் வகுப்பு மாணவன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சுமார் 5 வாகனங்களில் மோதி சங்கிலித்தொடர் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.Car
பதறவைக்கும் காட்சிகள்:
கடந்த வியாழக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் நடந்த இந்த விபத்தில், அதிவேகமாக வந்த கார் முதலில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த மோதலின் தாக்கத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்றிருந்த பலர் மீது மோதியது. இந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
குற்றவாளி கைது:
காரை ஓட்டிய 21 வயதான கௌரவ் சிங், பள்ளி பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நண்பருடன் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு கார் டயர் வெடித்ததாக கூறி, அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் காவல்துறை வாகனத்தை பறிமுதல் செய்து, கௌரவ் சிங்கை கைது செய்தது.
காயமடைந்தவர்கள் விபரம்:
இந்த விபத்தில், அர்மான், சாதனா படேல், அவரது தாயார் மீனா தேவி மற்றும் சாதனாவின் 6 வயது மகன் தீக்ஷாந்த் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், ஒரு இ-ரிக்ஷா மற்றும் ஆட்டோ மீதும் கார் மோதியதில், இ-ரிக்ஷா ஓட்டுநர் அவத் பிஹாரி காயமடைந்தார். படுகாயமடைந்த தீக்ஷாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். தீக்ஷாந்த் கேந்திரிய வித்யாலயாவில் 2ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்: