தெருவில் விளையாடிய 10 வயது சிறுவனை திடீரென தாக்கி தூக்கி வீசிய மர்ம நபர்! கொலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!!
லக்னோவில் 10 வயது சிறுவனை நபர் ஒருவர் தாக்கி தூக்கி வீசிய வீடியோ வைரலாகி அதிர்ச்சி. சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை, போலீஸ் விசாரணை தீவிரம்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 10 வயது சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் நடுவே நடந்த இந்த சம்பவம், தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விளையாட்டு மத்தியில் திடீர் தாக்குதல்
தகவலின்படி, சாலையோரத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு சிறுவனை பிடித்து கழுத்தைப் பற்றிக் கொண்டு ‘Choke Slam’ போல தூக்கி தரையில் பலமாக வீசுகிறார். இந்த viral video காட்சிகளில், தாக்குதலுக்குப் பிறகு சிறுவன் அசைவின்றி தரையில் விழுந்திருப்பதும் தெளிவாக தெரிகிறது.
காயமடைந்த நிலையில் உதவியின்றி கிடந்த சிறுவன்
தரையில் மோதி விழுந்த வேகத்தில், சிறுவனின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எழுந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுவனை பார்த்தும், தாக்கிய நபர் அங்கிருந்து அமைதியாக சென்றுவிடுகிறார். இந்த மனிதாபிமானமற்ற நடத்தை பொதுமக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
போலீஸ் விசாரணை தீவிரம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், விளையாட்டின் போது ஏற்பட்ட சிறிய தகராறே இந்த சிறுவன் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்த சின்ன விஷயத்துக்கு இந்த ஆட்டம் ஆடுது இந்த பொண்ணு! நடுரோட்டில் பெண் செய்த அராஜகம்..... பாவம் அந்த மனுஷன்! வைரல் வீடியோ..!!!