அதிர்ச்சி! நடு ரோட்டில் பைக்கில் காதலன், காதலி செய்த கொடூர காரியம்! வீடியோ!
Lovers hugging and kissing in highway while driving

நாகரிக வளர்ச்சி, சுதந்திரம் என்ற பெயரில் இன்றைய ஒருசில இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் தவறுகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு அமீர் கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் குலாம். இந்த படத்தில் அமீர்கான் பைக் ஓட்ட, ராணி முகர்ச்சி வாகனத்தின் பெட்ரோல் டாங் மீது அமர்ந்து அமீர்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவாறு செல்வார்.
தற்போது அந்த பட பாணியில் டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடி போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் அதேபோல சென்றுள்ளனர். காதலன் வாகனத்தை ஓட்ட ஒரு இளம் பெண் வண்டியின் பெட்ரோல் டாங் மீது அமர்ந்து அந்த வாலிபரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தவாறு சென்றுள்ளார்.
பைக்கை ஓட்டும் அந்த வாலிபர் மிகுந்த சிரமப்பட்டு அந்த வாகனத்தை வேகமாக இயக்குகிறார். இந்த காட்சியை அந்த நேரத்தில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இதுபோன்று பொது இடத்தில் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது வழக்குபதிய புது சட்டம் வேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.