தங்கையின் தோழியடன் காதல், கர்ப்பம்.. காட்டுக்குள் கொன்று புதைத்த காதலன்.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை காதலன் கொலை செய்தார்.
காதல் தனிமையால் கர்ப்பமான சிறுமி திருமணத்துக்கு வற்புறுத்திய நிலையில், அவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். வனப்பகுதியில் சிறுமியின் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
சிறுமி மாயம்:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, சீதாபூர் பகுதியில் வசித்து வருபவர் விஷால். இவரின் சகோதரி ஷிவானி. இவரின் தோழி மான்சி (வயது 17). சிறுமி அவ்வப்போது தனது தோழியான ஷிவானியின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மே மாதம் முதல் சிறுமி மான்சி மாயமாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: காதல் ஜோடியிடம் காசு வாங்கி பஞ்சாயத்து? கொள்ளையனை அடித்தே கொன்ற நட்புகள்.. தர்மபுரியில் பயங்கரம்.!
சடலம் மீட்பு & விசாரணை:
இதுகுறித்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், அதிகாரிகள் மான்சியை தேடி வந்தனர். இதனிடையே, சமீபத்தில் சீதாப்பூர் வனப்பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. சடலத்துடன் இருந்த செருப்பு உட்பட ஒருசில தடயங்கள் கொண்டு விசாரணை நடந்து வந்தது. மேலும், தடயவியல் ஆய்வும் செய்யப்பட்டு இருந்தது.
கோர நிலையில் சடலம்:
வனப்பகுதியில், வனவிலங்குகள் எலும்பு மற்றும் உடல் சதையை தின்று மீதம் விட்டிருந்த நிலையில் சடலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த சடலம் மாயமான சிறுமி மான்சியுடையது என உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுமி யாரால் கொலை செய்யப்பட்டார்? என அதிகாரிகள் பல கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
தங்கையின் தோழி:
அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் செயல்பட்ட ஷிவானியின் சகோதரர் விஷால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, தங்கையின் தோழியான மான்சியை விஷால் காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். பின் காதலின் பெயரில் காதலியை கட்டாயப்படுத்தி தனிமையில் நெருங்கி இருக்கிறார்.
கர்ப்பம் & கொலை:
இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், அதனை காதலனிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும், தன்னை திருமணம் செய்யுமாறும் வற்புறுத்தி இருக்கிறார். இந்த விஷயத்துக்கு ஒப்புக்கொள்ளாத விஷால், காதலியை சம்பவத்தன்று அழைத்துச் சென்று கொலை செய்து உடலை புதைத்தது அம்பலமானது. இதனையடுத்து, விஷாலை கைது செய்த காவல்துறையினர், அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுப்பிடித்தனர்.
இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!