சில்வர்ஸ்டோனில் ரேஸர் விஜய்?... திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா! ஒரே இடத்தில் இணைந்த நட்சத்திரங்கள்!
சில்வர்ஸ்டோனில் ரேஸர் விஜய்?... திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா! ஒரே இடத்தில் இணைந்த நட்சத்திரங்கள்!
பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் திடலில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று பந்தயத்தை நேரில் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் அங்கு வருகை தந்தது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய், நடிகர் அஜித்குமாரின் அழைப்பின் பேரில் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற லீ மான்ஸ் கப் கார் பந்தய நிகழ்வில் கலந்து கொண்டார். பந்தயத்தை தொடங்கி வைத்த விஜய், அஜித்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது பந்தயக் காரில் அமர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், பிரிட்டனில் நடிகை ராதிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயத் திடலுக்கு வந்தார். அஜித்குமாரின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 8 மாதங்களாக மாயமான கல்லூரி மாணவிகள்! ஆதார் அட்டை காட்டிய அதிர்ச்சி... பெங்களூருவை உலுக்கிய சம்பவம்..!!!
பந்தயத் திடலில் முதலமைச்சர் விஜய்யும் த்ரிஷாவும் ஒரே இடத்தில் இருந்து கார் பந்தயத்தை நேரில் ரசித்தனர். திரையுலகில் நீண்ட காலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் விஜய்–த்ரிஷா இருவரும் ஒரே இடத்தில் தோன்றிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய்யின் லண்டன் பயணம், அஜித்தின் கார் பந்தயம், அதில் த்ரிஷாவின் வருகை என அடுத்தடுத்து வெளியான காட்சிகள் சில்வர்ஸ்டோன் நிகழ்வை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றியுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இதையும் படிங்க: என்கிட்டயே உன் வேலையை காட்டுறீயா...! சீறிய பாம்பை கடித்து குதறிய கீரி....! திகில் வீடியோ..!!!