5 மாத குழந்தையின் வாய்க்குள் உயிர் மீனை போட்ட தாய்!! தொன்டையில் சிக்கி துடிதுடித்த குழந்தை! அதிர்ச்சி காரணம்!!
live fish on child mouth
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியை சேர்ந்தவர் பாபு. இவர் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தார். இவர் திருமணமாகி மனைவி மற்றும் ஐந்து மாத பெண் குழந்தையுடன் வசித்துவந்துள்ளார்.
பாபுவின் ஐந்து மாத குழந்தைக்கு, எப்போதும் வாயில் ஜொல்லு(உமிழ்நீர்) வடித்துக் கொண்டே இருந்தது. இதனை நிறுத்துவதற்காக, பாபுவின் மனைவி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அதற்கு சிலர், உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் வைத்தால் ஜொல்லு விடுவதை நிறுத்திவிடும் என மூடத்தனமான ஆலோசனையை கூறியுள்ளனர்.
அவர்களின் பேச்சைக்கேட்டு ஒரு உயிருள்ள மீனை குழந்தையின் வாயில் பாபுவின் மனைவி வைத்துள்ளார். அப்போது அந்த மீன் குழுந்தையின் வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். பின்னர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் தொண்டையில் சிக்கிய மீனை மருத்துவர்கள் எடுத்தனர்.