மனித உடலுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!! மருத்துவர்கள் வெளியிட்ட காரணம்!!
Lamb looking like human

ஆந்திராவின் புங்கனூரில் உள்ள பி.டிகாலனியைச் சேர்ந்த அயூப் என்பவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒரு ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கர்ப்பிணி ஆட்டிற்கு பிறந்த குட்டி மனித உடலுடனும், ஆட்டு தலையுடனும் காணப்பட்டது.
அப்பகுதியினரை வியப்படைய வைத்த அந்த ஆட்டுக்குட்டியின் பிறப்பு அந்த ஊரில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து அந்த ஆட்டு குட்டியை பார்த்துச்சென்றனர்.
ஆனால் பிறந்த சில மணி நேரத்தில் ஆடும், அந்த அதிசய ஆட்டிக்குட்டியும் இறந்து விட்டது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், மரபணு கோளாறு காரணமாகவே மனித உடல் அமைப்புடன் கூடிய விநோத ஆட்டுக்குட்டி பிறந்துள்ளதாக தெரிவித்தனர்.