அடி ஆத்தீ.. வயலில் புல் வெட்டிய விவசாயியின் கை, கழுத்தை சுற்றி இறுக்கி கொண்ட ராட்சத மலைப்பாம்பு..! உயிருக்கு போராடிய நிலை... அதிர்ச்சி காட்சி!!!
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் வயலில் புல் வெட்டிய இளைஞரை ராட்சச மலைப்பாம்பு சுற்றி வளைத்தது. சக விவசாயிகள் போராடி உயிருடன் மீட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் வயலில் புல் வெட்டிக் கொண்டிருந்த இளைஞரை ராட்சச மலைப்பாம்பு திடீரென தாக்கியது. புதருக்குள் மறைந்திருந்த பாம்பு, அவரது இரண்டு கைகளையும் கழுத்தையும் சுற்றி இறுக்கிக் கொண்டது. மூச்சுத் திணறிய நிலையில் இளைஞர் உயிருக்கு போராடினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக விவசாயிகள் அவரை பத்திரமாக மீட்டனர்.
புதருக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பு
லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலத்தில் உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காக புல் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் மறைந்திருந்த ராட்சச மலைப்பாம்பு திடீரென வெளியேறி அவரை நோக்கிப் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
கழுத்தை சுற்றி இறுக்கிய பாம்பு
எதிர்பாராத தாக்குதலால் நிலைதடுமாறிய இளைஞரை மலைப்பாம்பு நொடிப்பொழுதில் சுற்றி வளைத்தது. குறிப்பாக அவரது இரண்டு கைகளையும் கழுத்தையும் இறுக்கமாகச் சுற்றிய பாம்பு, பிடியை விடாமல் இருந்ததால் மூச்சுவிட முடியாமல் அவர் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் அருகிலிருந்த வயல்களில் வேலை செய்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
போராடி உயிருடன் மீட்ட விவசாயிகள்
சத்தம் கேட்டதும் சக விவசாயிகள் உடனடியாக அங்கு ஓடி வந்தனர். பலரும் சேர்ந்து மலைப்பாம்பின் பிடியை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இளைஞரை பாம்பின் பிடியிலிருந்து உயிருடன் மீட்டனர். மலைப்பாம்பு தாக்குதல் காரணமாக அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வயல்வெளிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.