×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களே... நல்ல வாய்ப்பு! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 25,000.... மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு.! மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!!!

மத்திய தொழிலாளர் நல வாரியம் 2026-27 கல்வியாண்டிற்கான கல்வி நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. பீடி, சினிமா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகள் ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மத்திய தொழிலாளர் நல வாரியம் சார்பில், பீடி தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான 2026-27 கல்வியாண்டு கல்வி நிதியுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களுக்கு கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை நேரடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

1-ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி மற்றும் தொழில்முறை பட்டப்படிப்புகள் வரை பயிலும் தகுதியான மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். கல்விச் செலவுகளை எளிதாக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதால், தகுதியுள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

விண்ணப்பதாரர்கள் தேசிய கல்வி உதவித்தொகை போர்ட்டலில் ஒருமுறை பதிவு (OTR) செய்து ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனிப்பட்ட சேமிப்புக் கணக்கு இருப்பதுடன், அது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

இதையும் படிங்க: மாணவர்களே... மாதம் 7 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உதவித்தொகை! முழு தகவல் உள்ளே!

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கடைசி தேதி

பள்ளி மாணவர்களுக்கான (Pre-Matric) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2026 ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். உயர்கல்வி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான (Post-Matric) விண்ணப்பங்களை 2026 அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகே, உதவித்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.12000.... தமிழக அரசின் சலுகை திட்டத்தை மிஸ் பண்ணிட்டாத்தீங்க....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Labour Welfare Board #Scholarship 2026-27 #தொழிலாளர் நல வாரியம் #Education Assistance #National Scholarship Portal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story