அதிர்ச்சி! ஆந்திரா பேருந்து தீ விபத்தில் லக்கேஜ் கேபினில் மறைந்திருந்த 400 மேற்பட்ட..... தடவியல் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!
கர்னூல் பேருந்து விபத்தில் லக்கேஜ் கேபினில் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட மொபைல் பேட்டரிகள் வெடித்ததே தீ விபத்திற்குக் காரணம் என தடவியல் துறை உறுதி செய்துள்ளது.
பேருந்துகளில் விதிமுறைகளை மீறி பொருட்களை எடுத்துச் செல்லும் பழக்கம் பல்வேறு உயிரிழப்புகளுக்கு காரணமாகி வரும் நிலையில், கர்னூல் மாவட்டத்தில் நடந்த இந்த விபத்து இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தடவியல் துறை
கர்னூல் பேருந்து விபத்தில் தொடர்பான தடவியல் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஆரம்ப கட்ட தகவல்களில் பைக்கின் பெட்ரோல் டேங்கில் ஏற்பட்ட தீ தான் விபத்துக்குக் காரணம் என கூறப்பட்ட நிலையில், உண்மையில் பேருந்தின் லக்கேஜ் பாக்ஸில் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட பொருளே தீ விபத்துக்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் குடிநீராக பயன்படுத்தும் கிணற்று நீரில் குப்பென்று பற்றி எரிந்த தீ ! ஏன்.? என்ன காரணம்? கன்னியாகுமரியில் பரபரப்பு..
காவேரி டிராவல்ஸ் நிறுவனத்தின் தனியார் வால்வோ பேருந்து அதிகாலை 3.30 மணியளவில் பைக்குடன் மோதியதும், தீ துவங்கியது. இதில் 40க்கும் அதிகமான பயணிகளில் 23 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொபைல் போன் பேட்டரிகள் வெடித்தது உறுதி
தடவியல் துறையினர் ஆய்வு செய்தபோது, பேருந்தின் லக்கேஜ் கேபினில் 400க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். அதிக வெப்பத்தால் அவை வெடித்ததே தீ மளமளவென பரவ காரணமெனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பக்கப் பகுதியில் இருந்த பயணிகள் தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர்.
ஓட்டுநர் மட்டும் அவசரமாக ஜன்னல் வழியாக தப்பியதால், பேருந்தின் முன்பக்க கதவுகள் திறக்க இயலாமல் போனது. மேலும் அவசரகால கதவும் கடும் வெப்பத்தால் செயலிழந்ததால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பு குறித்து தீவிர கேள்வி
விதிமுறைகள் தெளிவாக இருந்தாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் லக்கேஜ் பாக்ஸில் மொபைல் போன்கள் போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு முதன்மை காரணமாக திகழ்கிறது. பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து மீண்டும் ஒருமுறை பாதுகாப்பு விதிகளை மீறுவது எவ்வளவு பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை கண்கூடாக நிரூபித்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! பேருந்து தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல்கருகி பலி! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி....