ஐயோ இதுக்கெல்லாமா இப்படி பண்றது! சாவை தேடிப்போன 10 ஆம் வகுப்பு மாணவி! கதறும் குடும்பத்தினர்...!!!
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் நடனம் ஆட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடனம் ஆடுவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட மாணவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் உயிரிழந்தார்.
நடனம் ஆடுவதற்கு பெற்றோர் எதிர்ப்பு
கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு நடனம் ஆடுவதில் ஆர்வம் இருந்ததாக தெரிகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிரிழப்பு
இந்த நிலையில், மாணவி உயிருக்கு போராடியதை பார்த்த குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டனர். முதலில் ஹிட்னல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் கொப்பல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். ஆனால், மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இயற்கைக்கு முரணான மரணம் என வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். மாணவியின் மரணம் தொடர்பாக இயற்கைக்கு முரணான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, தங்கள் மகளின் மரணத்தில் வேறு நபர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை என குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவியின் மரணத்துக்கான முழுமையான காரணத்தை உறுதி செய்ய போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.