×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உன் மகனை கொலை பண்ணு... இல்லையேல் நிர்வாணமாக வீதியில் நட...! காதலால் தந்தை, மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!!!

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் காதலை எதிர்த்த பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரையும் அவரது தந்தையையும் ஆடையின்றி வீதியில் அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில், காதல் விவகாரத்தை எதிர்த்து இளைஞர் ஒருவரையும் அவரது தந்தையையும் ஆடையின்றி வீதியில் அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி சர்சுனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசுந்தரா பார்க் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் இளைஞர், நண்பருக்குத் தாக்குதல்

பாதிக்கப்பட்ட இளைஞர், அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த இளைஞரையும் அவரது நண்பரையும் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பக்கத்து வீட்டு நர்ஸ்க்கு ஆறுதல் சொல்லப் போன வாலிபர்...! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.... நம்பமுடியாது நள்ளிரவு சம்பவம்..!!!

இதையடுத்து, இளைஞரின் தந்தையையும் அங்கு வரவழைத்துள்ளனர். அவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, மகனைக் கொல்ல வேண்டும் அல்லது மகனுடன் ஆடையின்றி வீதியில் நடக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனார்.

வீதியில் அவமானப்படுத்தியதாகப் புகார்

மிரட்டலுக்குப் பயந்து இளைஞரும் அவரது தந்தையும் பொதுவெளியில் ஆடையின்றி அழைத்துச் செல்லப்பட்டதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கொல்கத்தா காவல்துறையினர், பெண்ணின் தந்தை, தாய் மற்றும் தாய்மாமன் ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையின் விசாரணை முடிவில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

 

இதையும் படிங்க: விடுதி அறை வாசலில் திடீரென சுருண்டு விழுந்த புதுமணப் பெண்! அடுத்த 5 வினாடிகளில் நடந்த பயங்கரம்... நடந்தது என்ன? பகீர் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கொல்கத்தா சம்பவம் #காதல் விவகாரம் #மேற்கு வங்கம் #Kolkata Crime #West Bengal Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story