ஒரே நேரத்தில் 2 ஆண்கள் வேணுமாம்..! ஒருவர் உள்ளூரில் இன்னொருவர் வெளிநாட்டில்! உன் பக்கத்தில் யார்? சிக்கியதால் போலீஸ்யிடமே பெண் போட்ட பலே நாடகம்!!!
கொச்சியில் வெளிநாட்டு காதலனை ஏமாற்றுவதற்காக கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை என பொய்ப் புகார் அளித்த இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இளம்பெண் ஒருவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறைக்கு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அது முழுவதும் ஒரு பொய்ப் புகார் என்பது வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் குறித்த அதிர்ச்சி புகார்
கொச்சியில் உள்ள ஒரு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வரும் இளம்பெண், சமீபத்தில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை மர்ம நபர்கள் காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இறக்கிவிட்டுச் சென்றதாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.
விசாரணையில் வெளிவந்த உண்மை
போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையின் போது அவர் அளித்த பதில்களில் பல முரண்பாடுகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கூறிய பகுதியில் உள்ள CCTV கேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில் அவர் கூறியபடி எந்தக் காரும் வராதது தெரியவந்தது. மாறாக, அவர் ஒரு இளைஞருடன் அமைதியாகப் பேசிக்கொண்டு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் போலீசார் அந்த வீடியோவை காட்டி விசாரித்தபோது, இளம்பெண் தன்னுடைய நாடகத்தை ஒப்புக்கொண்டார்.
இரண்டு காதலர்கள் – வெளிச்சத்துக்கு வந்த நாடகம்
போலீசார் விசாரணையில், அந்த இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களை காதலித்து வந்தது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் உள்ளூரில் இருந்தவர்; மற்றொருவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு உள்ளூர் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளிநாட்டில் இருந்த காதலன் போன் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்தவரின் குரல் கேட்கப்பட்டதால் சந்தேகமடைந்த அவர், "உன் அருகில் இருப்பது யார்?" என்று கேட்டுள்ளார். அதனால் மாட்டிக்கொள்ளக் கூடும் என்ற பயத்தில் இளம்பெண் திடீரென கடத்தல் நாடகம் ஆடியதாக கூறப்படுகிறது.
"யாரோ என்னைக் கடத்திச் செல்கிறார்கள்" என்று போனில் கத்திவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதை நம்ப வைக்கவே காவல்துறைக்கும் அழைத்து புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடவடிக்கை
போலீசாரை தவறாக வழிநடத்தியது மற்றும் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொச்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொய்யான தகவல்களால் சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 3 முறை விற்பனை... ஒவ்வொரு நிமிடமும் செத்து பிழைத்தேன்! 21 வயது பெண்ணுக்கு நடந்த நரக வேதனை..... பகீர் கிளப்பும் சம்பவம்!!!