மக்களே... கீட்டரில் இந்த ஒரு சின்ன தவறைச் செய்தால் பெரிய விபத்து தான் நடக்கும்! அதிர்ச்சி வீடியோ..!!!
சமையலறையில் கீட்டர் பொருத்தும்போது கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தவறான பொருத்துதல், அதிக அழுத்தம், தொழில்நுட்பக் கோளாறுகள் வெடிப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம்.
வீடுகளில் தண்ணீரைச் சூடாக்கப் பயன்படுத்தப்படும் கீடர்களை சரியான இடத்தில் பொருத்துவதும், முறையாகப் பராமரிப்பதும் மிகவும் அவசியம். குறிப்பாக சமையலறையில் கீட்டர் பொருத்தும்போது கூடுதல் கவனம் தேவை. தவறான பொருத்துதல் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கீட்டர் வெடிக்கும் அபாயம் இருப்பதால், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது அவசியம்.
கீட்டர் வெடிப்புக்கு என்ன காரணம்?
கீட்டரை முறையாகப் பொருத்தாமல் இருப்பது, உள் பாகங்களில் ஏற்படும் கோளாறுகள், பாதுகாப்பு விதிகளைப் புறக்கணிப்பது போன்றவை விபத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. குறிப்பாக, கீசருக்குள் நீராவி அழுத்தம் அதிகரித்து அதைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, தெர்மோஸ்டாட் பழுதடைந்து தண்ணீர் அளவுக்கு அதிகமாகச் சூடானாலோ ஆபத்து ஏற்படலாம். இதனால் பாதுகாப்பு வால்வுகள் உள்ளிட்ட பாகங்கள் சரியாகச் செயல்படுகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
இதையும் படிங்க: 14 நாட்கள் உயிர் போராட்டம்... பள்ளத்தில் தேங்கியிருந்த களிமண் தண்ணீரை குடித்து உயிரைக் காப்பாத்தி ஆசிரியர்! ஆடு மேய்பவரால் நடந்த அதிசயம்..!!!
சமையலறையில் கீட்டர் பொருத்தும்போது கவனம்
சமையலறையில் ஏற்கெனவே எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு மூலம் வெப்பம் உருவாகும் சூழல் உள்ளது. இதனால் கீசரைப் பொருத்தும் இடத்தைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். குறுகிய, காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடத்தில் கீசரைப் பொருத்துவது நல்லது.
பராமரிப்பில் அலட்சியம் வேண்டாம்
கிட்டரை அனுபவம் வாய்ந்த தகுதியான தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக மட்டுமே பொருத்த வேண்டும். அதன்பிறகும் பாதுகாப்பு வால்வுகள், மின் இணைப்புகள் மற்றும் பிற முக்கிய பாகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் கோளாறு அல்லது வழக்கத்திற்கு மாறான சத்தம் ஏற்பட்டால், கீட்டரைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் தகுதியான நிபுணரிடம் சரிபார்ப்பது அவசியம். முறையான பராமரிப்பும் பாதுகாப்பு நடைமுறைகளும் வீட்டில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க உதவும்.
இதையும் படிங்க: பெண்களே உஷார்! சமையல் செய்தபோது திடீரென வெடித்து சிதறிய பிரஷர் குக்கர்! 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்... பகீர் சம்பவம்..!!!