இனி பாம்பு கடிக்கு புதிய செக்....100 மீட்டர் தூரத்துலயே ஆபத்து தெரிஞ்சுரும்! அதிர்வு அலை கொடுத்து எச்சரிக்கும்... இனி விவசாயிகளின் கையில் மேஜிக் குச்சி!!!
விவசாயிகளின் பாதுகாப்புக்காக ‘கிசான் மித்ரா’ மின்னணு கருவி அறிமுகம். பாம்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உயிரிழப்பை குறைக்கும் முயற்சி.
விவசாயிகள் வயலில் சந்திக்கும் பாம்பு அச்சத்திற்கு தீர்வு காணும் முயற்சியாக, மத்திய அரசு புதிய மின்னணு கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘கிசான் மித்ரா’ என பெயரிடப்பட்ட இந்த சாதனம், மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் வெளியிடப்பட்டது. மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இதை அறிமுகப்படுத்தினார்.
பாம்புகளை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்
பார்ப்பதற்கு சாதாரண நடைப்பயிற்சி குச்சி போல இருக்கும் இந்த கிசான் மித்ரா கருவி, 100 மீட்டர் சுற்றளவில் மறைந்திருக்கும் விஷப் பாம்புகளை கண்டறியக்கூடிய திறன் கொண்டது. வயலில் தண்ணீர் பாய்ச்சும்போது அல்லது இரவு நேரங்களில் நகரும் போது, இதில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். அருகில் பாம்பு இருந்தால் அதிர்வு மூலம் எச்சரிக்கை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உயிர் பாதுகாப்பே நோக்கம்
இந்தியாவில் சுமார் 350 வகையான பாம்புகள் உள்ளன. அதில் 10 சதவீதம் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை என்றாலும், சிகிச்சை தாமதம் காரணமாக ஆண்டுதோறும் பலர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த ஆபத்து அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இவன் தாங்க டிசைன்னர்! ஜப்பான் தபால் பெட்டியை பார்த்துள்ளீர்களா? பாருங்க... ஷாக் ஆகிடுவீங்க.... வைரல் வீடியோ!
மரணங்களை குறைக்கும் புதிய முயற்சி
இதையடுத்து, பாம்பு கண்டறியும் கருவி மூலம் முன்கூட்டியே அபாயத்தை உணர்த்தி, உயிரிழப்புகளை குறைப்பதே முக்கிய நோக்கமாகும். நிலத்தடியில் அல்லது புதர்களுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துகளை முன்பே அறிய முடிவதால், விவசாயிகளுக்கு இது பாதுகாப்பான உதவியாக இருக்கும் என வேளாண் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.