×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிக்குற வெயிலுக்கு ஊருக்குள் வந்த 16 அடி நீள ராஜ நாகம்..! இவ்வளவு பெரிய பாம்பை பார்த்ததும் பதறி அடித்து ஓடிய மக்கள்..! அசால்ட்டாக தூக்கி வீசிய பாம்பு புடி வீரர்..!

King cobra entered to village and rescued safely

Advertisement

15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.

பாம்பு இனங்களில் மிகவும் கொடியவகை பாம்பாக கருதப்படும் ராஜநாக பாம்பு கடித்தால் உடனே உயிர் போய்விடும் என கூறுவது வழக்கம். அப்படி இருக்க ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் அனைவரும் வீடுகளிலையே முடங்கிஉள்ளநிலையில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டு, பாம்பு விசாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள தம்மடப்பள்ளி என்ற கிராமத்திற்குள் புகுந்தது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த வன பாதுகாவலர்கள், உள்ளூர் பாம்பு பிடி வீரர் ஒருவர் உதவியுடன் அந்த பாம்பை பிடித்து, செருக்குப்பள்ளி வன பகுதியில் கொண்டு சென்று அந்த ராஜநாகம் விடப்பட்டது. இந்த வகை பாம்புகள் கடித்து விட்டால் அதில் இருந்து பிழைக்க மருந்து எதுவும் இல்லை என்ற காரணத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#snake #King cobra
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story