×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளாவில் யாருக்கும் தெரியாமல் ஏழை பெண் செய்த உதவி! இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா? என பலரும் பாராட்டு!

kerala women helped affected people

Advertisement

கேரள மாநிலம் எர்ணாகுலம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உணவுப் பொட்டலத்தோடு நூறு ரூபாய் பணத்தையும் செலவுக்கு வைத்து அனைவரையும் நெகிழச்செய்துள்ளார் பெண் ஒருவர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில் எர்ணாகுளம் கும்பலங்கி கிராமத்தை சேர்ந்த மேரி என்ற பெண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நினைத்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே வேலையை இழந்த நிலையில், வெறும் 15 நாட்கள் மட்டுமே மேரி வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நினைத்த மேரி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுத்துள்ளார். அவர்களுக்கு தெரியாமலே உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் வைத்து கொடுத்துள்ளார். உணவு பொட்டலத்திற்குள் பணம் இருப்பதை பார்த்த பலர் மேரியை தேடி வந்து நன்றி கூறியுள்ளனர்.

இதுகுறித்து மேரி கூறுகையில், என்னால் முடிந்த மிகச்சிறிய அளவில் மக்களுக்கு உதவ நினைத்தேன். எனக்கு அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. இங்கு கடுமையான குளிர் நிலவி வருவதால் பலரும் டீ குடிப்பர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வைத்த பணம் டீ குடிக்கவாவது உதவும் என்று நினைத்தேன். உணவுப் பொட்டலத்துக்குள் நூறு ரூபாய் வைத்தது நான் தான் என்று யாருக்கும் தெரியவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது என கூறினார். மேரியின் செயலை பலரும் பாராட்டி பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kerala women #Helping
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story